Step into an infinite world of stories
அமாவாசை நாட்களில் ராத்திரி வேளைகளில் ரத்த பலி கொடுத்து துஷ்ட தேவதைகளுக்கு பூஜை செய்தால் பெரிய பணக்காரர்களாக மாற முடியும் என்கிற நம்பிக்கையில் கதையில் வரும் கதாபாத்திரங்கள் செயல்பட்டதால் ஏற்படும் விபரீத விளைவுகளே இந்த நாவலின் அடிப்படைக்கரு.
மும்பையில் வேலை பார்க்கும் கல்பனா ரயிலில் புறப்பட்டு சென்னைக்கு வருகிறாள். கல்பனாவுக்கு அம்மா, அப்பா கிடையாது. அண்ணன், அண்ணி மட்டுந்தான். கல்பனாவுக்கு அவர்கள் மாப்பிள்ளை பார்த்து வைத்து இருக்கிறார்கள். அழகான மாப்பிள்ளை. நல்ல இடம்.
கல்பனா ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்கு வருகிறாள். வீட்டில் அண்ணனும், அண்ணியும் இல்லை. அவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியாமல் குழம்புகிறாள் கல்பனா. வீட்டின் உள்ளே போய் ஒவ்வொரு அறையாகப் பார்க்கிறாள். ஒரு பீரோவின் கதவு லேசாய் திறந்து இருப்பதைப் பார்த்துவிட்டு அதை சரியாய் மூட நினைத்து பீரோவின் கதவைத்திறக்க, அவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அது உங்களுக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம்..
இரவு நேர வானவில்லை பாருங்கள்... சாரி.. கேளுங்கள். விடைகள் கிடைக்கும்.
© 2021 Storyside IN (Audiobook): 9789354341472
Release date
Audiobook: 24 February 2021
English
India